ரமேஷ் குமார் முந்திராவிலிருந்து பளார். சடக்கென்று திரும்பி பார்த்தேன். அடிபட்டது அமன். நானல்ல. அடிபட்டது அவன். வலி எனக்கு. அமன் இடது கையால் தனது இடது கன்னத்தையும் காதையும் தேய்த்துக்கொண்டிருந்தான். நிதின் ரத்தோர் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தான் ஹிந்தியில். அமன் புத்தனாக அமைதி காத்தான். நான் காரை விட்டு வெளியே வந்து, "ஸ்டாப் இட்" கத்தினேன். நிதின் திரும்பி பார்த்தான். "ஒன்லி ஒன், சார்! நோ மோர்!" என்றான் அந்த மஹாராஷ்ட்ரியன். இள ரத்தம். சூடானது. ஒரு லாரி டிரைவர் அடிபடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தப்பு அவன்மேல் இருந்தாலும். ஏன் நிதின் அமனை அடித்தான்? மதியம் மூன்று மணி. சாப்பிட்டு, பாண் (paan) போட்டு கொண்டு முந்திரா நோக்கி பயணம். இன்னோவா வண்டி. Author flanked by Driver Nitin Rathor (on his right) and Cogoport Deepank Varshney டிரைவர் நிதின் ரத்தோர். அணிக்கெட் டிரைவர் நம்பர் இரண்டு. கோகோபோர்ட் அலுவலர் தீபாங்க வருஷனே.பிளஸ் நான். "அஞ்சறை மணிக்கு நாம் முந்திரா போயிடுவோம் இல்லை?" கேட்...
ரமேஷ் குமார் டில்லியிலிருந்து இவர் சற்றே வித்தியாசமானவர். திருநெல்வேலிக்காரர். பெயர்: சிவசைலம். தொழில்: IAS அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம். நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை (cadre) சேர்த்தவர். எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies). சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார். லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில்...