ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
சேலம் AVR சர்க்கிள் , இந்தியன் ஆயில் fleet மானேஜர் சைதன்யா கிருஷ்ணா என்னை வரவேற்றார். பிரயாணக் களைப்பில் அன்று ஒய்வு எடுத்துக்கொண்டேன்.
மறுநாள் காலை, நாஷ்டாவுக்குப் பிறகு, இருவரும் நாமக்கல் பயணித்தோம். நேராக, சைதன்யா இந்தியன் ஆயில் டிரைவர் இளைப்பாறும் கோட்டத்துக்குக் கொண்டு சென்றார். ரொம்ப நல்ல வசதி. ஆனால், சுத்தமாக ஆள் நடமாட்டமே இல்லை. பல லக்ஷ ரூபாய் செலவில் கட்ட பட்ட வசதி; மேனேஜர் ஈஸ்வரன் சுற்றிக் காண்பித்தார்.
இந்த மாதிரியான டிரைவர் இளைப்பாறும் கோட்டங்களை - சராய் என்பர் இதனை ஹிந்தியில் அல்லது டிரைவர் ரெஸ்ட் ரூம் என்பர் ஆங்கிலத்தில் - நான் இந்தியாவின் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். இவை எல்லாமே இந்தியன் ஆயில் நிறுவனத்தினர் உருவாக்கியது.
சராய் கட்டப் பட்டது ரொம்ப தூரம் சவாரி செய்யும் லாரி டிரைவர்களுக்காகத்தான். வழியில் இளைப்பாற. உணவு உண்ண. குளிக்க. துணி துவைக்க. கொஞ்சம் நேரம் தூங்க. அவர்கள் வண்டிகளை ஜாக்கிரதையாக வைத்து இருக்க. ஏனெனில், வண்டியில் இருக்கும் சரக்கு பாதுகாப்புக்காக. நல்ல யோசனை.
ஆனாலும், இந்த முயற்சி முழு வெற்றி பெறவில்லை. ஏன்? பல காரணங்கள். இதோ, என் மனதில் பட்டவை: இந்த சராய் பராமரிப்பு அந்த பம்ப் மனஜரின் கடமை. நிறைய மனஜர்கள் என்னிடம் பேசுகையில் சொன்னது என்னவென்றால் அவர்களால் சரியாக மார்க்கெட்டிங் செய்ய இயல வில்லை.
மற்றொரு காரணம்: இந்த வசதிகளை அனுபவிக்க டிரைவர் இந்தியன் ஆயில் உடைய fleet அட்டை வைத்து இருக்க வேண்டும். அதாவது அவர்கள் இந்த பம்பில் டீசல் போட வேண்டும். (சமீபத்தில், இந்த கட்டளை நீக்க பட்டது.)
இந்த நாமக்கல் சராய் பற்றி பேசுகையில் இந்தியன் ஆயில் அதிகாரிகள் சொன்னது என்ன வென்றால்: (௧) இந்த பம்ப், நாமக்கல் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது. நாமக்கல் ஒரு பெரிய லாரி மையம். பல ஆயிரம் வண்டிகள் உள்ள ஊர். இந்தியாவிலேயே பேசப்படுகிற பெரிய லாரி மையம்.
எனவே, நாமக்கல் வண்டிக்காரர்கள் அவர்கள் வீட்டிலேயே தங்குவர். அவர்களுக்கு இந்த வசதி தேவை இல்லை. ஒகே. இந்த நெடுஞ்சாலை வழியாக தென் மாநிலம் செல்லும் வண்டிகள் ஏன் இந்த வசதிகளை உபயோகிப்பதில்லை? நல்ல கேள்வி. சரியான பதில் ஒன்றும் கிடைக்க வில்லை.
கிட்ட தட்ட பத்து ஆண்டு காலமாக நான் சுமார் 2௦௦,௦௦௦ கிலோமீட்டர் பாரத நெடுஞசாலைகளில் பயணித்து இருக்கிறேன். சுமார் 25 சராய் பார்த்து இருக்கிறேன் வேறு வேறு மாநிலங்களில். கதை ஒன்றுதான்.
இந்த சராய் ஏன் முக்கியம்? லாரி டிரைவர் ஓட்டும் வண்டிகள் அந்நிய நாடுகள் போல குளிர் வசதி பொருத்தப்பட்டவை அல்ல. நமது தேசம் வெப்ப பிரதேசம். எப்பவுமே சூடு. வண்டிக்கு வெளியே சூடு. வண்டிக்கு உள்ளேயும் சூடு. சரியான காற்றோட்டம் கிடையாது. ஏன்? மின் விசிறி கூட இருக்காது. வேண்டும் என்றால், டிரைவர் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தியாவில் 9௦ விழுக்காடு வண்டிகள் ரொம்ப சின்ன சின்ன முதலாளிகள் உடையது. வண்டி சத்தம் (வாடகை அல்லது கூலி) ரொம்ப குறைச்சல். எனவே வண்டி உள்ளே நிறைய வசதிகள் செய்ய இயலாது என்று ஒரு வாதம்.
இந்த மாதிரியான சூடான வண்டி ஓட்டுவது கடினம். களைப்பு அதிகம். இந்த களைப்பு டிரைவர் திறனைப் பாதிக்கும். விபத்து ஏற்பட அதிக சாத்தியம். இந்த மாதிரி விபத்துக்களை தடுக்க, சாராய் உதவும். இப்போது புரிகிறதா ஏன் இந்த சராய் சர்ச்சை?
(தொடரும்

Comments
Post a Comment