Skip to main content

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்





ரமேஷ் குமார் டில்லியிலிருந்து 

ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான்.

ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.

கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர்.

வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார்.

சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு.

போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும்.

செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார்.

இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே.

என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா?

மனசை என்னோவோ பண்ணித்து.

ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க.

இந்த மாதிரி, ஆக்சிடென்ட் ஆகும் பட்சத்தில், டிரைவர் என்ன பண்ணனும்?

என்னதான், மத்தவங்களுடைய  தப்பா இருந்தாலும் லாரி டிரைவர்ஐ தான் அடிப்பாங்க. எனவே, வண்டியை விட்டு விட்டு இறங்கி ஓடிப்போனும். எங்கே? கிட்ட இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்க்கு . சரண்டர் ஆகணும். சரக்கு? முதல்லே டிரைவர் தன்னோட உயிரை காப்பாத்திக்கணும். மத்ததெல்லாம் பிறகுதான்.

ஊர்க்காரங்க அடிக்க வந்தாலும், போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.

ஆக்சிடெண்ட்லே உயிர் சேதம் ஏற்பட்டால், கொஞ்சம்  நாள் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும். மாஜிஸ்திரேட் கோர்ட்லே விசாரிக்கப்பட்டு, ஜாமீன்லே வெளியிலே வர சாத்தியம். எப்பல்லாம் கேஸ் விசாரணைக்கு வருமோ, அப்பல்லாம் ஆஜர் ஆகணும். கஷ்டம்தான். வேற வழி இல்லை.

ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேச விரும்பறேன்.

எந்த ஒரு காரணத்துக்காகவும் கேஸ் ஆகும் போகும்போது ஒரு பிரச்சினை உருவாகும். எந்த ஊரிலே ஆக்சிடென்ட் ஆச்சோ அந்த ஊர் லோக்கல் நபர் கேரண்டி (guarantee) கொடுக்கணும். அந்த மாதிரி லோக்கல் நபர் கிடைக்கிறது அதனை சுலபம் இல்லை. ஏதோ ஒரு மாதிரி அந்த லோக்கல் நபரை பணம் கொடுத்தாவது பிடிச்சாவனும்.

இன்றைக்கு, எல்லாருக்கும் ஆதார் அட்டை இருக்கு. வோட்டர் அட்டை இருக்கு. பேன் (PAN) அட்டை கூட இருக்கும். இந்த மாதிரி ஆதார பூர்வமான  அத்தாச்சி இருக்கும்போது எதுக்கு லோக்கல் நபர் கேரண்டி? புரியலை.

இது சம்பந்தமா தமிழ்நாடு லாரி ஓனர் சங்கங்கள் சென்ட்ரல் அரசாங்கத்துக்கு எழுதணும்.

சாலை விபத்துக்கள் ரொம்ப சாதாரணம். அடிக்கடி நடக்கிறது. அவசியமா கவனிக்க படவேண்டிய விஷயம்.


(தொடரும்)

Comments

Popular posts from this blog

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்

ரமேஷ் குமார் டில்லிலிருந்து ரஜத்  உபாயகர்.   இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.  25 வயது மும்பைக்கர்.  உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.  நிறைய படித்தவர்.  பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.  திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.  லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.  சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.  பார்த்ததை புத்தகமாக போட்டார்.  டிரக் தே இந்தியா  சமீபத்தில்,  நான் அவருடன் உரையாடினேன்.  அதன் சுருக்கம் இதோ: ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்? லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன். இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்? குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும்,...

5-மாற்றுங்கள் பழக்கவழக்கங்களை

ரமேஷ் குமார் டில்லிலிருந்து நாம எதிர்பாத்த வசதிகள்  அனைத்தும்  கிடைத்தாலும் அதை பயன் படுத்த (முறையாக) தெரிந்தும் தெரியாத பலர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிராறர்கள். மற்றவர் நம்மை மதிக்கும் விதமாக நடந்துகொள்ளவே நமக்கு பயிற்ச்சி வேண்டும், என்று தமிழ்நாடு டிரைவர்  வெங்கடாச்சலம் என்னுடன் பேசும்போது டீவீடி(Tweet)னார்.  அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? யோசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் நான் பதிவு செய்த சஸ்டைனபிலிட்டி (பேண்தகைமை) கருத்துபற்றி பேசுகையில்,பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைக்கு வெளியே டிரைவர் ரெஸ்ட் ரூம் .. கக்கூஸ் காட்டிக்கொடுக்க வில்லையென சொல்லி இருந்தேன். நூற்றுக்கு நூறு உண்மை. வெங்கடாச்சலம் அதற்கு பதில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் சொல்வதும் உண்மைதான். டிரைவர் பழக்கவழக்கங்கள் சற்று வேறுபாடானதுதான். சந்தேகமில்லை. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி நம் டிரைவர் சகோதரர்கள் அதனை நம்புவதாக தெரியவில்லை. அவர்களுடைய  சில பழக்கவழக்கங்கள் விசீற்றமானது.பெரும்பாலோனோர் காக்கி சீருடை அணிவதில்லை. சட்டப்படி அணியவேண...