Skip to main content

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்



ரமேஷ் குமார் டில்லிலிருந்து

ரஜத்  உபாயகர். 
இவரை தெரிந்திருக்க நியாயமில்லை. 
25 வயது மும்பைக்கர். 
உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர். 
நிறைய படித்தவர். 
பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர். 
திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது. 
லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார். 
சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார். 
பார்த்ததை புத்தகமாக போட்டார். டிரக் தே இந்தியா 
சமீபத்தில், நான் அவருடன் உரையாடினேன். 
அதன் சுருக்கம் இதோ:

ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்?
லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன்.

இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்?
குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும், என் உள்மனம் இன்னும் ஏதேதோ இருக்கும்னு சொல்லிற்று. அதனால்தான் இந்த லாரி பயணம்.

*பயணத்திற்கு பிறகு, என்ன மாற்றங்கள்? *
கட்டாயமா, அவர்கள் குடிகாரர்கள் அல்ல. கடும் உழைப்பாளிகள். நேர்மையான தொழில் செய்பவர்கள், சமூகம் அவர்களை சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்த்தாலும். அவர்களை பற்றி தப்பான அபிப்ராயம் பரவி விட்டது.

அரசாங்கம் லாரி டிரைவர் சமூகத்துக்கு ஏதாவது உருப்படியாக அவர்களுடைய வேலை குறித்து, வாழ்க்கை  குறித்து செய்கிறதா?
சுருக்கமாக சொன்னால், இல்லை என்பதுதான் என் பதில். ஏன்னென்றால், அவர்கள் சௌபாக்கியம் அரசாங்கத்தின் முன்னுரிமை (PRIORITY ) இல்லை. ஏன்? நாடு முழுதும் டிரைவர் கள் ஒன்று சேரவில்லை. அவர்கள் ஒரு வோட் வங்கியாக அரசியல்வாதிகள் பார்க்க வில்லை. எனவே, ஒரு கவனிப்பு கிடைக்க வில்லை.

மோட்டார் அதிபர்களுக்கும் டிரைவர் களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றி...
என் கணிப்பு இவர்களுக்கு இடையே ஒரு சங்கடமான சண்டை ( UNEASY TRUCE). முதலாளிகளுக்கு நன்றா தெரியும் டிரைவர் கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று. ஆனாலும் ஒன்றும் சொல்வதில்லை. ஏன்? அவர்கள் கொடுக்கும் சம்பளம் ரொம்ப குறைச்சல். சில உறவுகள் பிரமாதம். டிரைவர் கஞ்சா அடிப்பது தெரியும். டிரைவர் மூலமாக சரக்கு கேட்டு வாங்கிப்பார்கள் பஞ்சாப் ராஜஸ்தான் போற டிரைவர் கிட்டே இருந்து.

நீங்க டிரான்ஸ்போர்ட் மந்த்ரியாக இருந்தால், என்ன அஞ்சு காரியங்கள் செய்வீங்க?
. நெடுஞசாலைகள் டிரைவர் ரெஸ்ட் ரூம் - தங்க வசதி  - பண்ணி கொடுப்பேன். இதன் மூலம், அவர்கள் சுய மரியாதை கூடும். நன்றாக இளைப்பாற முடியும். தூக்கம் இன்மையினால் ஏற்படும் அயர்ச்சி குறையும். அதனால், விபத்துக்கள் குறையும். உற்பத்தித்திறன் உயரும்.
. ஊழல் புரியும் சாலை அதிகாரிகளை ஒழிப்பேன். இந்த முயற்சி டிரைவர் களுக்கு பக்கபலமா இருக்கும்.
. டிரைவர் கலை சமூக பாதுகாப்பு வலைக்குள் கொண்டு வருவேன்.
. புரோக்கர் ஒன்று சேர்ந்து டிரைவர் கலை கொள்ளை அடிப்பதை தடுப்பேன்.
.டிரைவர் ட்ரைனிங் பள்ளிகள் தொடங்கி, சரியாய் வகையில் பாடம் சொல்லி குடுத்து, நல்ல கொம்பனிகனில் வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பேன்.

நன்றி, ராஜேஷ்!
உங்களுக்கும் நன்றி


Comments

Popular posts from this blog

7- டிரைவர் நலம் விரும்பி, சிவசைலம் சார்!

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து இவர் சற்றே வித்தியாசமானவர். திருநெல்வேலிக்காரர். பெயர்: சிவசைலம். தொழில்: IAS அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம். நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை   (cadre)  சேர்த்தவர். எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies). சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார். லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில்...

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான். ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர். வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார். சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும். செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார். இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே. என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா? மனசை என்னோவோ பண்ணித்து. ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு...