ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
திருநெல்வேலிக்காரர்.
பெயர்: சிவசைலம்.
தொழில்: IAS அதிகாரி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம்.
நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை (cadre) சேர்த்தவர்.
எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies).
சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார்.
லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய சராய் விவரங்களை கேட்டு வாங்கி, ஹைவெய்ஸ் ஹீரோஸ் (Highway Heroes) எனும் நிறுவனத்துடன் லாரி டிரைவர் களுக்கு சரியான இளைப்பாறும் வசதி நிலையங்களை உபயோகத்தில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் இந்தியன் ஆயில் சராய் உள்ளது. ஆனால் சரியாய் பயன்படுத்த படவில்லை. சிவசைலம் இந்த மாதிரி அரசாங்க சொத்துக்களை எப்படி சரியாய் உபயோகிப்பது பற்றி செயல் படுத்த விரும்புகிறார்.
இந்தியன் ஆயில் நிறுவனமும் இந்த முயற்சியில் ஆர்வம் காட்டுகிறது.
என்ன தொடர்பு இந்த சாராய்க்கும் சிவசைலத்துக்கும்?
நன்கு இளைப்பாறி வண்டி ஓட்டும் டிரைவர் விபத்துக்கு காரணம் ஆகமாட்டார். வருடம்தோறும் இந்தியாவில் 15௦,௦௦௦ (ஒன்றரை லக்ஷம்) மரணம் சம்பவிக்கிறது விபத்தினால். இதை பாதியாக குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
விபத்துகளால் நமது தேசத்துக்கு ஏகப்பட்ட நஷ்டம். சுமார் மூன்று விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP ) . பல லக்ஷ கோடி ரூபாய் விநயம். தேவை இல்லாதது. நஷ்டத்தை குறைத்தால், லாபம் தானாகவே அதிகரிக்கும். எனவே, சிவசைலம் இந்த சராய்களை உபயோகிக்க விரும்புகிறார்.
அவர் முயற்சியில் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

Comments
Post a Comment