ரமேஷ் குமார் டில்லிலிருந்து
நாம எதிர்பாத்த வசதிகள் அனைத்தும் கிடைத்தாலும் அதை பயன் படுத்த (முறையாக) தெரிந்தும் தெரியாத பலர் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கிராறர்கள். மற்றவர் நம்மை மதிக்கும் விதமாக நடந்துகொள்ளவே நமக்கு பயிற்ச்சி வேண்டும், என்று தமிழ்நாடு டிரைவர் வெங்கடாச்சலம் என்னுடன் பேசும்போது டீவீடி(Tweet)னார்.
அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? ஏன் சொன்னார்? எப்போது சொன்னார்? யோசிக்க ஆரம்பித்தேன். சமீபத்தில் நான் பதிவு செய்த சஸ்டைனபிலிட்டி (பேண்தகைமை) கருத்துபற்றி பேசுகையில்,பெரிய தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைக்கு வெளியே டிரைவர் ரெஸ்ட் ரூம் .. கக்கூஸ் காட்டிக்கொடுக்க வில்லையென சொல்லி இருந்தேன். நூற்றுக்கு நூறு உண்மை.
வெங்கடாச்சலம் அதற்கு பதில் கருத்து தெரிவித்து இருந்தார். அவர் சொல்வதும் உண்மைதான். டிரைவர் பழக்கவழக்கங்கள் சற்று வேறுபாடானதுதான். சந்தேகமில்லை. சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி நம் டிரைவர் சகோதரர்கள் அதனை நம்புவதாக தெரியவில்லை.
அவர்களுடைய சில பழக்கவழக்கங்கள் விசீற்றமானது.பெரும்பாலோனோர் காக்கி சீருடை அணிவதில்லை. சட்டப்படி அணியவேண்டும். அதை விடுங்கள். தென்னக டிரைவர் பற்றி அதிகம் தெரியாது. சுமார் 40 ஆண்டு காலம் வடக்கில் வாழ்கிறேன், வடநாட்டு டிரைவர் பழக்கவழங்கள் அத்துப்படி.
உட்கார்ந்த இடத்திலே வாய் கொப்பளிப்பது, கை கழுவுவது சாப்பிட பிறகு ரொம்ப சகஜம். சாப்பாட்டு வளாகத்தில் நடப்பது கஷ்டம். தாபா முதலாளியும் ஒன்னும் சொல்லமாட்டார். எதாவது சொன்ன கிராக்கி போய்ட்டா? அந்த கவலை அவருக்கு. ரொம்ப அருவருப்பான காட்சி. ஆனாலும்...
90 சதவிகிதம், நெடுஞசாலைகளில் பயணிக்கும் டிரைவர்களுக்கு கக்கூஸ் கிடையாது. வழியில் புதர் அல்லது வெட்டவெளியில் மலம் கழிக்க வேண்டும். அப்படியே, இந்தியன் ஆயில் பம்ப் அல்லது தாபா வில் கக்கூஸ் வசதி இருந்தால், நம்ம டிரைவர் அவைகளை பயன்படுத்தும் விதம் கண்டிக்க தக்கது.
சரியாய் நீர் விட்டு கக்கூசை சுத்தம் செய்ய மாட்டார்கள். எங்கு பார்த்தாலும் பீடி சிகரெட்டு துண்டுகள். துர்நாற்றம் மூக்கை துளைக்கும். பழகிப்போச்சா இந்த மாதிரி வாழ்க்கை? வருந்தத்தக்க செயல். அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த சமயத்தில், என்னக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்ததது. பெரும்பாலும், மோட்டார் அதிபர்கள் அவர்கள் டிரைவர் கூட விழா எடுக்கும் பொதுவாக, சேர்ந்து சாப்பிட மாட்டார்கள். இவர்கள் தனியே. அவர்கள் தனியே. இந்த பிரிவினை என்னை உறுத்தியது பல காலமாக. சமீபத்தில், ஒரு அதிபரை கேட்டுவிட்டேன். டிரைவர் என்ன தீண்ட தகாதவர்களா?
அவர் சொன்னார்: அங்கே பாருங்கள். ஒழுங்கா வரிசையா வந்து சாப்பாடை எடுத்துக்கலாம் இல்லையா? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஏன் இந்த ஒழுக்கமின்மை? ஒரு தட்டில் ஏன் இவ்வளவு அள்ளி போட்டுக்கணும்? அங்கே பாருங்கள். தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது. மீண்டும் வேண்டும் என்றல், திரும்பி வந்து எடுத்துக்கொள்வது. ஏன் இந்த சின்ன விஷயம் புரியமாட்டேங்கிறது?
பார்த்தேன். அவர் ஏதும் பெரிதுபடுத்த வில்லை. கண்கூடான கட்சி. வருத்தம்தான். ஏன் டிரைவர்கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள கூடாது?
ஒரு வேலை டிரைவர் கள் தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டால், இந்த மோட்டார் அதிபர்கள் அவர்களுடன் சரி சமமாக அமர்ந்து சாப்பிடுவார்களா? சிந்திக்க வேண்டிய கருத்து.
இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. பெரும்பாலோனோர் பயணிக்கிறோம். அங்கே சுற்றுலா வண்டிகளில் செல்கிறோம். எங்கே எல்லாம் உணவுக்காக தங்குகிறோமோ, அங்கெல்லாம் அந்த வெளிநாட்டு டிரைவர் நம் கூடத்தான் அமர்ந்து சாப்பிடுவார். வேறுபாடு ஏதும் கிடையாது.
நாம் நம் தேசத்தில் பயணிக்கும்போது என்ன செயகிறோம்? டிரைவர் தனியா தூர உற்காந்து சாப்பிடுவார். நம் கூட அல்ல. டிரைவர் அதை பொருட்படுத்தமாட்டார். பழகிப்போச்சு இந்த பாகுபாடு. இந்த பிரிவினை.
கேட்டே விட்டேன் ஒரு டிரைவர் கிட்டே. அவர் சொன்னார்: ரெண்டாவது வாட்டி வந்தா சாப்பாடு இருக்குமுன்னு என்ன நிச்சயம்? சரியான நெத்தியடி.
நாமெல்லாம் ஒரு
ஹிப்போகிரேட்டோ??. போலியோ? சிந்திப்போம். மோட்டார் அதிபர்கள் சிந்திக்க வேண்டும்.
அதே சமயம், டிரைவர்கள் கூட தங்கள் வாழ்க்கைமுறைகளை திருத்திக்கொள்ள வேண்டும். வண்டி ஒட்டாமல் வீட்டில் இருக்கும் போடு சாப்பிட இடத்திலேயே துப்பறோமா? இல்லையே. அப்படினா, ஏன் இந்த தகாத பழக்கம் வெளியே? மாறுங்கள். நல்ல பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை செய்ய காசோ பணமோ தேவை இல்லை. சரியாய்? செய்வீர்களா? நம்புவோம் நீங்கள் மாறுவீர்கள் என்று.
(தொடரும்)

Comments
Post a Comment