ரமேஷ் குமார் டில்லியிலிருந்து
இன்று லிஙகேடின் (LINKEDIN) சமூகத் தளத்தில், குமாரமங்கலம் பிர்லா ஒரு பதிவு செய்து இருந்தார். இவரை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. எனவே, ஒரு அறிமுகம் தேவைப் படவில்லை.
இந்தப் பதிவில், அவர் பேண்தகைமை (சஸ்டைனபிலிட்டி/Sustainability) பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். "சஸ்டைனபிலிட்டி ஒரு நல்ல குடியுரிமை மட்டுமல்ல, ஒரு நல்ல வணிகம் கூட" ... சபாஷ், பிர்லா ஜி! நன்றாகவே சொன்னிர்கள்.
சஸ்டைனபிலிட்டி ஒரு முக்கியமான கருத்து. என்னை விவரிக்க விடுங்கள்.
நாம் இப்போது ஒரு அவுட்சோர்சிங் (Outsourcing) மாடல் தயாரிப்பு முறையில் ஈடுப்பட்டு இருக்கிறோம். எந்த ஒரு பொருளும் பல பாகங்களைக் கொண்டது. இப்பாகங்கள் பல்வேறு இடங்களில் பல சிறிய நடுத்தர தொழில் அதிபர்களால் தயாரிக்கப்பட்டு பெரிய தொழிற்சாலைகளை அடைந்து அங்கு ஒன்று சேர்க்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கும் பொருளாக விநியோகிக்கப்படுகிறது.
இவை எல்லாம் சாத்தியம் ஆக, நல்ல சாலைகள் உள்ளன. நல்ல வண்டிகள் உள்ளன. ஆனாலும், நல்ல டிரைவர் வசதி இருக்கிறதா என்றால், என்னுடைய பதில் நெகடிவ் தான். ஏன்ன, ஒரு தொழில் அதிபரும் அவர்களுடைய தொழிற்ச்சாலைக்கு வெளியே தேவையான டிரைவர் ரெஸ்ட்ரூம் செய்ய வில்லை. பேச்சு மட்டும் பெரிசா இருக்கு.
கார்ப்பரேட் சமூக பொறுப்பு (கார்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி / Corporate Social Responsibility) அப்படி இப்படின்னு பெரிய தண்டோரா. இன்னிக்கும், தொழிற்ச்சாலைக்கு வெளியே சரக்குக்கு காத்திருக்கும் டிரைவர் மலம் கழிக்க புதரை சுற்றும் முற்றும் தேட வேண்டி இருக்கு. கக்கூஸ் கிடையாது. ஒரு மரியாதையை கிடையாது. கேட் கீப்பர் கூட டிரைவர் ஐ ரொம்ப மட்டமா நடத்துவார்கள்.
என்னதான் பெரிய பண்டம் பண்ணினாலும், அதை தயாரிக்கற பாகங்களை கொண்டு வரவும் மீண்டும் சந்தைக்கு கொண்டு போகவும், வண்டி வேணும். டிரைவர் வேணும். இந்த முதலாளிகளோ அல்லது அவங்க கீழே வேலைச் செய்யறவங்களோ தலையிலேத் தூக்கி வச்சிகிட்டுப் போகமுடியாது. என்னவோ, இந்த முதலாளிகளுக்கு, இந்த சின்ன விஷயம் புரிய மாட்டேங்குது.
ஆனா, பெத்த பேச்சு. சஸ்டைனபிலிட்டி! அப்படி இப்படின்னு.
ஏற்கனவே, 22 விழுக்காடு டிரைவர் பற்றாக்குறை. ஓத்தனும் டிரைவர் ஆக விருப்பம் இல்லை. புதுசு புதுசா டிரக் வண்டி வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தேவையான டிரைவர் எண்ணிக்கை இல்லை. எதிர்காலத்தை நெனைச்சுப் பார்த்த பயமா இருக்கு.
பிர்லா ஜி, நீங்க ஒரு மிக பெரிய தொழில் அதிபர். முதல்ல உங்க பேக்டரி முன்னால இந்த சஸ்டைனபிலிட்டி கருத்தை செயல்படுத்த முயற்சிங்க. செய்வீர்களா? .... செய்யுஙகு முதல்லே.
(தொடரும்)

Comments
Post a Comment