Skip to main content

1 - பரிக்ஷையும் பெங்களூரு பயணமும்



ரமேஷ் குமார் டில்லியிலிருந்து

வருடம் 2020 தொடங்கியது எனக்கு சென்னையில். ஒத்தை டிஜிட் குளிர் பிரதேஷத்திலிருந்து பறந்தேன் என் தாயகத்துக்கு.

எதுக்கு தெரியுமா?

பரிட்சை எழுத. நிஜமா?. அறுபத்திநாலு  வயசுல என்ன பரிட்சை? நல்ல கேள்வி.

லாஜிஸ்டிஸ் செக்டர் ஸ்கில் கொன்சிலோட எக்ஸாம். ஒரு நாள் பூரா வகுப்பறை கோச்சிங் . மறு நாள் கார்த்தலை இரண்டு மணி நேர எக்ஸாம். ஆப்ஜெக்ட்டிவ் டைப் தான். ரொம்ப சீக்ரம் முடிச்சுட்டேன்.

ட்ரான்ஸ்போர்ட்மித்ராலேருந்து எட்டு பேரு இந்த கோர்ஸ் பண்ணினோம்.

என்ன எக்ஸாம் தெரியுமா? Trainer எக்ஸாம். என்ன trainer ? லாரி ட்ரைவர் ட்ரைனிங். ட்ரிவிங் பத்தி இல்ல. சாலை பாதுகாப்பு விதி முறைகள். மற்றும் வேறு பல விஷயங்கள்.

ரிசல்ட் இன்னும் வரலை. ஆனால் பாஸ் பண்ணி இருப்போமுன்னு நம்பிக்கை.  கீப்பிங் பிங்கர்ஸ் க்ராஸ்ட்.

ரொம்ப வருஷத்துக்கப்பறம் இந்த மாறி வகுப்பறை அனுபவம். என்ஜாய் பண்ணினேன். கொஞ்சம் டென்ஷனா இருந்துது முதல்ல.
--
அடுத்த நாள் காத்தலை கார் வழியா பெங்களூரு போனோம். தேவ் ஸ்டெரிங்கில. நான் பக்கத்துக்கு சீட்லே; செல்வனும் அருணும் பின் சீட்லே வழியிலே  முருகன் இட்லி கடையிலே டிபன் சாப்பிட்டோம். என்ன கும்பல்! சோத்துக்கு இந்த கும்பலா?

பெங்களூரு போயிச் சேர்த்தே மணி ஒன்றை. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் லே ப்ரொப்சர் ரகுராமை சந்தித்தோம். அப்புறம், அன்னிக்கு ராத்ரி அவரை மீண்டும் மீட் பண்ணினோம் பெங்களூரு சிட்டி ரயில்வே ஸ்டேஷன் கிட்டே.
--
நெக்ஸ்ட்  டே, நான் சேலம் புறப்பட்டேன். செல்வன் மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டிலே ட்ராப் பண்ணினார்.

கொஞ்சம் தூரம் போனப்புறம், ஏகப்பட்ட கலாட்டா. என்னடான்னு பாத்தா, வத்தல்  நாகராஜ் குழுவினர் சாலை மறுப்பு போராட்டம். எதுக்கு? ரஜினிகாந்த் படம் தர்பார் பெங்களூர்லே ரிலீஸ் பண்ணகூடாதுன்னு. எனிஹோவ் சேலம் மதியம் இரண்டு மணிக்கு போய்ச் சேந்தேன். என்ன விஷயம்?

(தொடரும்)

Comments

Popular posts from this blog

7- டிரைவர் நலம் விரும்பி, சிவசைலம் சார்!

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து இவர் சற்றே வித்தியாசமானவர். திருநெல்வேலிக்காரர். பெயர்: சிவசைலம். தொழில்: IAS அதிகாரி. கடந்த இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் வணிக அமைச்சரகத்தில் லாஜிஸ்டிஸ் செகிரேட்டரியாக பணி புரிகிறார். சித்திரை பிறந்தால் இவருடைஓய்வு காலம் துவங்கும். யார் கண்டது, மீண்டும் இவரை தொடரச் சொன்னாலும் சொல்லலாம். நரேந்திர மோடி அரசாங்கம் முதன் முறையாக லாஜிஸ்டிஸ் வளாகத்தை தொடங்கிய போது, இவரை தேர்ந்து எடுத்தது அந்த பதவிக்கு. கர்நாடக பணிநிலையை   (cadre)  சேர்த்தவர். எளிதாக வியாபாரம் செய்ய (Ease of Doing Business) என்ன செய்ய வேண்டும் என்பது இவருடைய குறி. ஏன்? நம் நாட்டில் லாஜிஸ்டிஸ் கட்டணம் மற்றைய தேசங்களை பார்க்கும்போது அதிகம். இதனால், நமது பொருட்கள் விலையும் ஜாஸ்தி. ஏன் இந்த கட்டணம் அதிகம் என்றால், ஏராளாமான இயலாமைகள் (inefficiencies). சிவசைலம் பதவி ஏற்றத்தில் இருந்து, ரொம்ப பிஸி. நிறையவே தில்லுமுல்லுகள் பார்க்க நேரிடுகிறது. எப்படி அதனை நீக்க முடியும் என்று சிந்தித்து செயல் படுகிறார். லாரி டிரைவர்களை பற்றி, நிறையவே கவனம். சமீபத்தில், இந்தியன் ஆயில்...

6-ஒரு உரையாடல் ரஜத் உபாயகருடன்

ரமேஷ் குமார் டில்லிலிருந்து ரஜத்  உபாயகர்.   இவரை தெரிந்திருக்க நியாயமில்லை.  25 வயது மும்பைக்கர்.  உயர் மட்ட மத்திய வர்க்கத்து இளைஞர்.  நிறைய படித்தவர்.  பத்திரிகைகளில் கொஞ்சம் காலம் பணி செய்தவர்.  திடிரெண்டு நாட்டை சுற்றி பார்க்கும் ஆசை ஏற்பட்டது.  லாரியில் போய் பார்த்தால் என்ன? யோசித்தார்.  சுமார் 6-7 மாதங்கள் பல லாரியில் இந்தியா பூரா சுற்றினார்.  பார்த்ததை புத்தகமாக போட்டார்.  டிரக் தே இந்தியா  சமீபத்தில்,  நான் அவருடன் உரையாடினேன்.  அதன் சுருக்கம் இதோ: ஏன் இந்த லாரி சுற்றுப்பயணம்? லாரி டிரைவர் ரொம்ப முக்கியமான அல்லது உன்னதன்மை காரியம் செய்கிறார்கள் நாட்டுக்கு. இருந்தாலும், அவர்களை பற்றி யாரும் எழுதுவது   இல்லை. அவர்களுடனும் பயணம் செய்து அவர்கள் இன்ப துன்பங்களை  அறிய ஆவல். இதன் மூலம் லாஜிஸ்டிஸ் செலவு பற்றி அறிய விரும்பினேன். இந்த பயணத்துக்கு முன்பு லாரி டிரைவர் பற்றி என்ன எண்ணினீர்கள்? குடிகாரர்கள். வேக கட்டுப்பாட்டை மதிக்காதவர்கள். விலை மாதர்களை அணுகுபவர்கள். இருந்தாலும்,...

4-சாலை விபத்துக்களும் அதன் விளைவுகளும்

ரமேஷ் குமார் டில்லியிலிருந்து  ரொம்ப நாளைக்கப்பறம், பாலகுமாரனோட இரும்பு குதிரைகள் புத்தகத்தை மீண்டும் திறந்தேன். அவர் இரும்பு குதிரைகளன்னு குறிப்பிடறது லாரிகளைத்தான். ஒரு டிரைவர், ஒரு கிளீனர் பத்தி அருமையா எழுதி இருக்கார். சில பக்கங்கள்தான். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். கரீம்பாய் டிரைவர். செல்லத்தம்பி கிளீனர். வர வழியிலே கரீம்பாய் யார் மேலேயோ வண்டி ஏத்தி கொன்னுட்டார். நிறுத்தாம வந்துட்டார். சமீபத்தில் இரண்டாம் நிக்காஹ் ஆச்சு அவருக்கு. போலீஸ் கேஸ் ஆச்சுன்னா, ஜெயிலுக்கு போனும். செல்லத்தம்பி ஜெயிலுக்கு போக தயார். ஏன்? குரு தக்ஷிணை. கரீம்பாய்தானே அவனுக்கு ட்ரிவிங் கத்துக் கொடுத்தார். இந்த மாதிரி  விஷயம் ரொம்ப சகஜம் லாரி டிரைவர் கிளீனர் உலகத்திலே. என்ன? மிஞ்சி போனா கொஞ்சம் நாளைக்கு ஜெயிலுக்கு உள்ளே இருக்கணும். அப்பறம் முதலாளி ஜாமீனிலே வெளியே எடுப்பார். கோர்ட்க்கு கூப்பிடும் போதெல்லாம் போவணும். ஒகே. ஆசானுக்கு இது கூட செய்யலேன்னா? மனசை என்னோவோ பண்ணித்து. ஆக்சிடென்ட் ஆனா, லாரி டிரைவர் ஓடி போறது சர்வ சாதாரணம். இல்லைனா டிரைவர் ஐ அடிச்சு ஒதைச்சு உண்டு...